SUARA WARGA PERAK

Thursday, July 2, 2009

தீர்வு காணும் வரை பின்வாங்க மாட்டோம்

பினாங்கு மாநில முதல் அமைச்சர் லிம் குவான் எங் அவர்களின் பத்திரிகை அறிக்கை - 02/07/09

கம்போங் புவா பாலா குடியிருப்பாளர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மேம்பாட்டு நிறுவனம் வழங்க முன்வந்த நஷ்ட ஈடு தொகைக்கு சம்மதம் தெரிவிக்காத வரையில், அந்நிறுவனம் "நல்லெண்ணத்துடன்" வழங்கும் எந்த ஒரு சல்லி காசையும் மாநில அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது.

இதன் தொடர்பில் அந்நிறுவனம் வருகிர ஆகுஸ் 8 இல், புல்ல்டோசரை அனுப்பி அங்கிருக்கும் மக்களை வழுக்கட்டாயமாக வெளியேற்ற போவதாக மிரட்டுவதை, மாநில அரசாங்கம் நுஸ் மெட்ரோ (பி) செண்டிரியான் பெர்ஹாத் நிறுவனத்தை வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற மிரட்டல்கள் கண்டதுக்குரியவை மட்டுமல்லாமல் அவ்வைகையில் அந்நிறுவனம் அங்கிருக்கும் வீடுகளை தரைமட்டமாக்க நினைப்பது பொறுப்பற்ற செயலாகும்.

இவ்வகையில் மறைவான முறையில் அங்கிருக்கும் மக்கலுக்கு அச்சம் செய்யும் வகையில் நடந்துக்கொள்வது கொஞ்சம்கூட முறையான செயல் அல்ல என்பதனை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். கொடுக்கபட்ட ஒரு மாத கால அவகாசம் ஆகஸ்ட் 8 இல் முடிவடைவதால், அதற்குள் அங்கிருக்கும் மக்கள் தானாகவே வெளியேற மறுத்தால் அக்கால அவகாசம் நீடிக்கப்படாது என்று மிரண்டல் விடுப்பது முறையான செயலல்ல.

இப்பொழுது நடைமுறையில் உள்ள ஒரு மாத கால அவகாசம், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மாநில அரசாங்கம் அந்நிறுவனத்திற்கு வழகப்பட்டவை ஆகும். இக்கால அவகாசம் அந்நிறுவனம் ஒரு சிறந்த தீர்வை இப்பிரச்னையில் கண்டறிவதற்கான அவகாசமாகும்.

நுஸ் மெட்ரோ நிறுவனம் அங்கிருக்கும் மக்களுக்கு மிகவும் உயர்ந்த நஷ்டஈடு தொகையான ரிங்கிட் மலேசியா 140,000 லிருந்து 260,000 வரை வழங்க முன்வந்திருப்பதாக தெரிவித்தனர். இது போன்ற சன்மான தொகையை இந்நிலத்தில் தற்காலிகமாக குடியிருப்போருக்கும் அவர்களை சேர்ந்த குடும்பத்தாருக்கும் வழகப்படும் என்றனர். அதுமட்டும் மின்றி, அங்கு இருக்கக்கூடிய ஒரு மாட்டு தண்ணைக்கு சுமார் ரிங்கிட் மலேசியா 330,000 சேர்த்து ஐந்து வருட இலவச வாடகை நிலம் ஒன்று வழங்க முன்வந்ததை, நிராகரிக்கப்பட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனம் கூட்டரசு நீதிமன்ற உத்தரவை பெற்றிருப்பதால், சட்டத்துக்கு உட்பட்டு அங்கிருக்கும் மக்களுக்கு எந்த ஒரு நஷ்டீடையும் கொடுக்காமல் செயல்பட முயன்றால் அது போன்ற போக்கு எந்த ஒரு சுமுக தீர்வையையும் இப்பிரச்சனையில் கொண்டுவரா இயலாது.

சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒரு சிறந்த தீர்வை கண்டறிய முன்வரவேண்டுமே ஒழிய தேவையில்லாத மற்றும் அங்கிருக்கும் மக்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் பேசுவதை தவிர்த்தல் வேண்டும். ஒரு சிறந்த முடிவு அனைவரின் முன்னேற்றத்தை உறுதிசெய்யும் என்பதனை இந்நிறுவனம் புரிந்துக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் புவா பாலா மக்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட நஷ்ட ஈடு தொகையை ஏற்றுக்கொள்ளாதவரை அந்நிறுவனம் "நல்லெண்ணத்துடன்" மாநில அரசாங்கத்திற்கு வழங்க முன்வந்த தொகையிலிருந்து எந்த ஒரு காசையும் பினாங்கு அரசாங்கம் ஏற்காது என்று இதன் வழி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆகையால் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்த புவா பாலா குடியிருபாளர்களை காலி செய்யும் முயற்சி நடவடிக்கைக்கும் மாநில அரசாங்கத்திற்கும் எந்த ஒரு சம்மதமும் கிடையாது என்பதனை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். இருப்பினும் கூட்டரசு நீதிமன்ற கட்டளையை கொண்டு எந்த ஒரு தரப்பினரும் புல்டோசெர் கொண்டு புவா பால நிலத்தை காலி செய்ய முயன்றால் அதுவும் பினாங்கு மாநில அரசாகத்தின் செயல் அல்ல என்பதை நினைவில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எதுவாகினும் மாநில அரசாங்கம் , இப்பிரச்சனை ஒரு நல்ல தீர்வை காணும் வரை அங்கிருக்கும் மக்களுக்கு துணை நின்று உதவி செய்ய அயராது பாடுபடும் என்பதனை அறிவித்துக்கொள்கிறேன்.


லிம் குவான் எங்

No comments: