"பூவிழந்த நேரத்தை வண்டறியும்
போழுதிலந்த நேரத்தை புல்லரியும்
சேய் பிறந்த நேரத்தை தாய் அறிவால்
செந்தமிழே உன் பிறப்பை யார் அறிவார்"
என்று துவங்கிய "தமிழ் அரசியல் மாலை" மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. அனைத்து பேச்சாளர்ககும் தமக்குரிய பாணியிலே பேசி மக்களுக்கு சேர வேண்டிய செய்திகளை மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் தெரிவித்தனர்.
கிட்டதட்ட சுமார் 500 கும் மேற்பட்ட தமிழ் அரசியல் ஆர்வாளர்கள் இந்த நிகழ்வில் கழுந்து கொண்டனர்.
இந்த அரசியல் மாலையில் தமிழன் மு.குலசேகரன், தமிழன் முனைவர் டாக்டர் ராமசாமி, தமிழன் சிவநேசன், தமிழன் சிவகுமார், தமிழன் டாக்டர் ஜெயபாலன் தமிழச்சி காமாட்சி துரைராஜூ மற்றும் கல்வி சுடர் டத்தோ ஹாஜி தஸ்லீம் அனைவரும் வேவ்வேறு தலைப்பினில் பேசி வந்தவர்களை கவர்ந்தனர்.
தொடக்க உரை நிகழ்த்திய இரும்பு மனிதன் என்று போற்றப்படும் ஜ.சே.க வின் மூத்த அரசியல்வாதியான சகோதரர் லிம் கிட் சியாங் அவர்கள் ஒரு மலேசியா வின் உட்கருதுக்களை பற்றி பேசினார்.
இந்த நிகழ்வில் சிறப்பு பார்வையாளராக வந்திருந்த மனித உரிமை மீறல் வழக்கறிஞர் சகோதரர் அகுஸ்தின் அந்தோணி அவர்கள் சில நிமிடங்கள் மத மாற்ற பிரச்சனைகளை பற்றி விளக்கம் தந்தார்.
எக்செல்சியர் தங்கும் விடுதியில் நடத்தப்பட இந்த நிகழ்வு, சுமார் இரவு மணி 11.30 க்கு முடிவுற்றது.
No comments:
Post a Comment